‘ராகாவில் சிறந்த 100’ போட்டியைப் பற்றிய சில விபரங்கள்
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3, 2023 வரை நடைபெறும் ‘ராகாவில் சிறந்த 100’ வானொலிப் போட்டியின் வழி நேயர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறலாம்.
பரிசுகளை வெல்ல நேயர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை, கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது ஒலியேரும் சிறந்த 100 பாடல்களை வானொலி அல்லது SYOK செயலியின் வழி கேட்க வேண்டும்.
அழைப்பதற்கான சமிஞ்ஞைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் நேயர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலில் ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துக்கொள்வார். 10 வினாடிகளில், அழைப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட தரவரிசைக்கு ஏற்பச் சரியானப் பாடலை யூகித்துக் கூற வேண்டும்.
சரியாகப் பதிலளிக்கும் அழைப்பாளர் வீட்டிற்கு ஒரு பிரத்யேக ராகா சட்டையை (RAAGA T-shirt) எடுத்துச் செல்வார்.
மேல் விபரங்களுக்கு, ராகா அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.


