Homeகலை உலகம்மலேசியாவில் மீண்டும் ஹரிஸ் ஜெயராஜ்! இன்று 2 மணி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்

மலேசியாவில் மீண்டும் ஹரிஸ் ஜெயராஜ்! இன்று 2 மணி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்

கோலாலம்பூர், பிப்.3-
அண்மையில் மலேசியாவில் தாம் படைத்த இசை நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்நாட்டு ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தலைநகர் வருகிறார் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.

அவ்வகையில் பிப்ரவரி 19ஆம் தேதி தலைநகர், புக்கிட் ஜாலில்,அஸியாத்தா அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபறும் “ஹார்ட் ஆஃப் ஹரிஸ்’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 12,000 பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஹரிணி,திப்பு, நரேஷ் ஐயர் ஆகியோரோடு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பென்னி தயாள், கார்த்திக், ஹரிசரண், திவாகர் ,ஹரி பிரியா போன்றோரோடு சூப்பர் சிங்கர் பாடகர்களும் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி இங்கு நடைபெற்ற இவரின் முதலாவது இசை நிகழ்ச்சி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் விருப்பத்திற்கிணங்க ஹரிஸ் ஜெயராஜ் இரண்டாவது முறையாக தமது நிகழ்ச்சியை இங்கு படைக்கவிருக்கிறார்.

மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்ச்சியில் முன்னணி பாடகர் ஹரிஸ் ராகவேந்திராவும் இணைவார் என்று .கூறப்படுகிறது.

இதன் டிக்கெட்டுகளை இன்று பிற்பகல் 2.00 மணி தொடக்கம் ticket.2u.com.my என்ற அகப்பக்கம் வழி வாங்கலாம். தொடர்புக்கு 012-3340154 .

spot_img

latest articles

explore more