பத்துமலை, பிப்.4-
நாளை தைப்பூச திருவிழாவில் ஜாஸ்மின் சோப் நிறுவனம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதோடு சிறப்பு விற்பனையிலும் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.
நண்பகல் 12 மணி அளவில் பத்துமலை திருத்தல நுழைவாயிலில் பக்தர்களுக்குத் தாங்கள் அன்னதானம் வழங்கவிருப்பதாக ஜாஸ்மின் சோப் நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி ஸ்ரீ குமரேசன் கூறினார்.
அதே வேளையில், பிற்பகல் 3.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை சிறப்பு விற்பனை ஒன்று நடைபெறும் .10 சோப்புகளை வாங்குவோருக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
ஜாஸ்மின் கருமஞ்சல் . சோப் நிறுவனம் கடந்த 3 ஆம் தேதி முதல் பத்துமலை வளாகத்தில் இந்த சோப்புகளை நியாயமான விலையில் விற்பனை செய்து வருவதாக அறியப்படுகிறது.


