Homeஆன்மீகம்தைப்பூசத்தில் எல்லா உயிர்களுக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

தைப்பூசத்தில் எல்லா உயிர்களுக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப். 4

தை மாதம் என்பது நன்மை தரக்கூடிய, சுபகாரியங்கள் நடைபெறும் தெய்வீக மாதமாகும். தமிழ்ப்புத்தாண்டு, பொங்கலை அடுத்து தை மாதத்தில்தான்  தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்று
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

முருகனுக்கு உகந்த நாளான இன்று, ஆங்காங்கே பக்தர்களின் வருகையால் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பல சிறப்புகள் மிக்க தைப்பூசத் திருநாளில் விரதம் இருந்து காணிக்கை செலுத்துவது பக்தர்களின் நம்பிக்கை.  வழிவழியாக இந்துக்கள் கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது இன்றைய தைப்பூசம்.

காவடிகள்,  பால் குடம் எடுத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கையைச் செலுத்தும் பக்தர்கள் பிறருக்குத் தொந்தரவு இல்லாமல் தங்களது காணிக்கையைச் செலுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சுட்டிக் காட்டினார்.

நாம் மரியாதையான சமயம் மட்டுமல்ல, கட்டுப்பாடான சமயம் என்பதையும் இதன்வழி நிரூபிப்போம். பிறருக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். ஒவ்வொரு பக்தர்களும் இதை உணர்ந்து கடைப்பிடித்தால் தைப்பூசம் இன்னும் களைகட்டும்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

spot_img

latest articles

explore more