கோலாலம்பூர், பிப். 10-
ராகா வானொலியில் ஒலிபரப்பாகும் ‘ஒன்னுல மூனு’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள் பின்வருமாறு:
ராகா இரசிகர்கள் இப்போது முதல் பிப்ரவரி 24 வரை ‘ஒன்னுல மூனு’ எனும் வானொலி போட்டியில் பங்கேற்று ரிம100 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞையைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைபேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
அறிவிப்பாளர் ஒரு சொல்லைப் பகிர்ந்து கொள்வார். கொடுக்கப்பட்ட சொல்லில் தொடங்கும் மூன்று பாடல்களைப் பங்கேற்பாளர்கள் 10 வினாடிகளுக்குள் பாட வேண்டும்.
சரியான பாடல்களைப் பாடும் பங்கேற்ப்பாளர்கள் ரிம100 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், கொடுக்கப்பட்டப் பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தச் சுற்றுக்குப் பனிப்பந்தாகும்.
மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
‘ஒன்னுல மூனு’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடர்க


