Homeசமூகம்புதிய கல்வி மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர்களுக்கு விளக்கமளிப்பு -ஸ்ரீ முருகன் நிலையம் ஏற்பாடு

புதிய கல்வி மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர்களுக்கு விளக்கமளிப்பு -ஸ்ரீ முருகன் நிலையம் ஏற்பாடு

பெட்டாலிங் ஜெயா, பிப்.18-
தற்போதைய பள்ளி சார் மதிப்பீடு  மற்றும் கல்வி தவணைக்கான இறுதி தேர்வு முறை (யுஏஎஸ்ஏ) குறித்து பெற்றோர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (எஸ்எம்சி) சிறப்பு விளக்கமளிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

இங்குள்ள எஸ்எம்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் இப்புதிய மதிப்பீட்டு முறையின் கீழ் மாணவர்களுக்கு  ஆசிரியர்களால் எப்படி  புள்ளிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பெற்றோர்கள் பலர் தங்கள் ஐயப்பாடுகளை முன் வைத்ததாக எஸ்எம்சி இணை இயக்குநர் சுரேந்திரன் கந்தசாமி தெரிவித்தார்.

“பிள்ளைகள் தேர்வுக்காகப் படிக்கக்கூடாது. இவர்களின் முழுமையான ஆற்றல் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்நோக்கத்திற்காகத்தான் இப்புதிய மதிப்பீட்டு முறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு இவர்களால் வழிகாட்ட முடியும்” என்றார் அவர்.

பள்ளி சார் மதிப்பீட்டு முறை மீதான முதற்கட்ட கூட்டம் இது.  நாடு முழுமையும் உள்ள ஸ்ரீ முருகன் நிலையங்களில் இது தொடரப்படும். இந்த மதிப்பீட்டு முறை தொடர்பாக விளக்கம் பெற விரும்பும் பெற்றோர்களுக்கு தாங்கள் விளக்கம் அளிக்கத் தயார் என்றும்  ‘:பெற்றோர்களின் எண்ணங்களோடு ஓர் உரையாடல்’ எனும் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சுரேந்திரன் விவரித்தார்.

நம்மோடு நமது சமூகமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவி வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இலட்சிய திட்டத்திற்குத் தோள் கொடுக்க முன் வந்திருக்கும் பெற்றோர்களின் செயலை சுரேந்திரன் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் சுரேந்திரன், ஆசிரியர் எஸ்.அறிவேந்திரன் நாயர் எஸ்எம்சி தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் ஆகியோர்  விளக்கம் அளித்தனர்.நேரடியாகக் கலந்து கொள்ள இயலாத பெற்றோர்களுக்காக முகநூல் வழி  நேரலையாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more