Homeசமூகம்பிப். 25,26 இல் பத்து காஜாவில் வேலை வாய்ப்பு கண்காட்சி! மனித வள அமைச்சு -...

பிப். 25,26 இல் பத்து காஜாவில் வேலை வாய்ப்பு கண்காட்சி! மனித வள அமைச்சு – சொக்சோ ஏற்பாடு

புத்ராஜெயா, பிப். 24-

சொக்சோ மற்றும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி ‘MYFutureJobs’ பிப்ரவரி 25,26, ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் பேரா, பத்து காஜா, சில்வர் லேக் வில்லேஜ் அவுட்லட் மண்டபத்தில் நடைபெறும் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

காலை 9.00- மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக MYFutureJobs 2023 இல் காத்திருக்கின்றன.

கால தாமதமின்றி உடனே நாடுங்கள்.
www.myfuturejobs.gov.my/careerfair அகப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more