திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்!

சென்னை, செப்.26-

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில்,அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சென்னை க்ளோபல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அதற்காக நடராஜன் காத்திருப்பதாகவும், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன