முகப்பு > மற்றவை > உலகின் அதிக எடை கொண்ட பெண் உயிரிழந்தார்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

உலகின் அதிக எடை கொண்ட பெண் உயிரிழந்தார்!

அபுதாபி, செப். 26-
உலகின் அதிக எடை கொண்ட மெஸீரைச் சேர்ந்த பெண் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் இருதயம், சிறுநீரகம் செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமான் அஹ்மெட் அப்துல் எய் ஏட்டி (வயது 37) என்ற அப்பெண் புர்ஜீத் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் இந்த சிகிச்சைக்காக கடந்த மே மாதம் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு சுமார் 20 மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அவரை கண்காணித்ததோடு சிகிச்சை அளித்து வந்தது.

தங்களை நம்பி வந்த அப்பெண்ணை மற்றவர்களை போல நடக்க வைக்க முடியும் என பெரிதும் நம்பிய மருத்துவர்கள் அதற்கான சிகிச்சைகளை வழங்கினர். சுமார் 500 கிலோகிராம் எடை கொண்ட அப்பெண் தனது உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை குறிப்பாக வயிற்று பகுதியை குறைக்கும் அறுவை சிகிச்சையை கடந்த மார்ச் மாதம் மும்பையிலுள்ள சைஃபீ மருத்துவமனையில் மேற்கொண்டார். இதன் வாயிலாக அவர் சுமார் 100 கிலோகிராம் எடையை குறைத்தார்.

அதன் பின்னர் அந்த பெண்ணின் உறவினருக்கும் அந்த மருத்துவமனையின் தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதில் எமான் அஹ்மெட் மும்பையிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் புர்ஜீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன