‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ போட்டி

27
கோலாலம்பூர், செப்.16-
ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0 போட்டியைப் பற்றினச் சில விபரங்களைக் காண்போம்.
  • ராகா இரசிகர்கள் இப்போது முதல் செப்டம்பர் 29 வரை  ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம1000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
  • வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
  • ரிம1000 ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர்கள் ஒலிபரப்பப்படும் 2-வினாடிப் பாடல் துணுக்கின் தலைப்பை 5 வினாடிகளுக்குள் சரியாக யூகிக்க வேண்டும்.
  • பதில் தவறாக இருந்தால், பாடல் துணுக்கு 5 வினாடிகளுக்கு ஒலிபரப்பப்படும். ரிம300 ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர்கள் 5 வினாடிகளுக்குள் பாடலின் தலைப்பைச் சரியாக யூகிக்க வேண்டும்.
  • பதில் இன்னும் தவறாக இருந்தால், பாடல் துணுக்கு 10 வினாடிகளுக்கு ஒலிபரப்பப்படும். ரிம100 ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர்கள் 5 வினாடிகளுக்குள் பாடலின் தலைப்பைச் சரியாக யூகிக்க வேண்டும்.