ராகா இரசிகர்கள் இப்போது முதல் அக்டோபர் 20 வரை ‘ராகாவில் நான் அவன் இல்லை’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம300 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் குறிப்பிட்ட அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
ஒரு பிரபலத்தைப் பற்றிய ஒரு துப்பை அறிவிப்பாளர் பகிர்வார். ரிம300 ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அந்தப் பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
பதில் தவறாக இருந்தால், அதேப் பிரபலத்தைப் பற்றிய இரண்டாவது துப்பு, அடுத்தப் பங்கேற்பாளருக்கு அறிவிப்பாளரால் வழங்கப்படும். ரிம200 ரொக்கப் பணத்தை வெல்ல அந்தப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அதேப் பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
பதில் மீண்டும் தவறாக இருந்தால், அதேப் பிரபலத்தைப் பற்றிய மூன்றாவது துப்பு, அடுத்தப் பங்கேற்பாளருக்கு அறிவிப்பாளரால் வழங்கப்படும். ரிம100 ரொக்கப் பணத்தை வெல்ல அந்தப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அதேப் பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.