spot_img
14.9 C
London
spot_img
Home சமூகம் பிரிக்பீல்ட்ஸில் தீபாவளிச் சந்தைக்கு அனுமதி -டத்தோ அஸ்மான் அபிடின்

பிரிக்பீல்ட்ஸில் தீபாவளிச் சந்தைக்கு அனுமதி -டத்தோ அஸ்மான் அபிடின்

0
271

கோலாலம்பூர், அக்.24-

   பிரிக்பீல்ட்ஸில்   தீபாவளிச் சந்தைக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர்  டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்தார்.

 இச்சந்தை திறக்கப்பட்ட பின் அனைவரும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் சந்தை பகுதியைத் தூய்மையாக  வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 இதற்கான மேல் விவரங்களை கோலாலம்பூர்  மாநகர் மன்றம் அறிவிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டார மக்களும் வியாபாரிகளும் டத்தோ அஸ்மானுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். 

   டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசு மடானி அரசு என்பதை உண்மையாக நிரூபித்துள்ளது என்று டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.

   தீபாவளிச் சந்தையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று கடந்த சனிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் வட்டார இந்தியச் சகோதரிகள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

   இதனைத் தொடர்ந்து மறுதினமே இந்த இந்திய சகோதரிகளின் அவலக்குரலை கவனிக்கும்படி   டத்தோ பண்டார் டத்தோ கமாருஷாமானுக்கு  செய்தி அனுப்பியிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட இலாகாவின் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உதவுமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் டத்தோ மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.

   பிரிக்பீல்ட்ஸிலுள்ள சங்கம் தங்களது பாரம்பரியத் தீபாவளிச் சந்தை இடத்திற்கு ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் லோரோங் ஆ தோங் ஆகிய இடங்களுக்கு மனுச் செய்திருந்ததாகவும் அதை மாநகர் மன்றம் நிராகரித்து விட்டதாகவும் மாநகர் மன்றம் மூலம் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் சங்கம் விண்ணப்பித்த இடத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் அவ்வட்டாரத்தில் ஆடம்பர அடுக்ககத்தின் மேம்பாட்டுப் பனிகள் முடிவுற்றக் காரணத்தினாலும் பார்வையற்றோருக்கான நடை பாதை மற்றும் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றால் சங்கத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். 

   அதன் பிறகு அச்சங்கம் மாநகர் மன்றத்திடம் மீண்டும் மேல் முறையீடு செய்ததாகவும் அந்த மேல் முறையீட்டை மாநகர் மன்றத்தின் சிறப்புக் குழு கடந்த 16ஆம் தேதி ஜாலான் துன் சம்பந்தன்,  ஜாலான் லோரோங் ஆ தோங் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் 10”x10” சதுர அடியில் அனுமதி வழங்கப் பரிசீலித்து வருவது குறித்துத் தம்மிடம் தெரிவியப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.  

   மாநகர் மன்றத்திடம் இன்று தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய போது அனுமதிக் கடிதம் இன்று வெளியாகும் என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

   இவ்வேளையில்  பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் அரசியல் செயலாளர்  டத்தோ அஸ்மான் அபிடின் , அவரின் அதிகாரிகள், டத்தோ பண்டார் டத்தோ கமாருஷாமான், மாநகர் மன்றத்தின் உயர் அதிகாரிகள், தமிழ் ஊடகங்கள் அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் டத்தோ மலர்விழி குணசீலன் .

மாநகர் மன்றத்தின் இச்சந்தைக்கான லைசென்சின் விலை வெ.30 மட்டுமே எனவும் சந்தையை நடத்த  ஆர்வமுள்ளவர்கள் அதற்கான மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ளச் சங்கம் அல்லது மாநகர் மன்றத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.