கோலாலம்பூர், நவ.7-
2023 தீபாவளிக்காக ஆஸ்ட்ரோ சிறப்பு நிகழ்ச்சிகள் வழி தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவிருக்கிறது.
கங்குபாய் காத்தியவாடி
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11 நவம்பர், பிற்பகல் 2 மணி
இயக்குநர்: சஞ்ஜை லீலா பன்சாலி
நடிகர்கள்: ஆலியா பட், சாந்தனு மகேஸ்வரி, அஜய் தேவ்கன்& கத்ரீனா கைஃப்
வகை: குற்றவியல் நாடகத் திரைப்படம்
மனிதக் கடத்தலுக்குப் பலியாகிய பிறகு, தான் ஒரு காலத்தில் சிப்பாயாக இருந்த உலகத்தை ஆள அங்குள்ள தொடர்புகளை ஓர் இளம் பெண் பயன்படுத்துகிறார்.
லக்கிமேன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், பிற்பகல் 2 மணி
இயக்குநர்: பாலாஜி வேணுகோபால்
நடிகர்கள்: யோகி பாபு, வீரா & ரைச்சல் ரெபேக்கா
வகை: நகைச்சுவை நாடக திரைப்படம்
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறிய எண்ணும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.
மீனா 40 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11-12 நவம்பர், மாலை 5 மணி
கலைஞர்கள்: மீனா, ரஜினிகாந்த், குஷ்பு, போனி கபூர், ஜீவா, சரத் குமார், ராதிகா சரத் குமார், சங்கர், ரோஜா, பிரபுதேவா & சினேகா
வகை: கச்சேரி
சினிமாத் துறையில் நடிகை மீனாவின் 40 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி.
பீட்சா 3 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், இரவு 9 மணி
இயக்குநர்: மோகன் கோவிந்த்
நடிகர்கள்: அஸ்வின் காக்குமானு & பவித்ரா மாரிமுத்து
வகை: திகில் திரில்லர் திரைப்படம்
தான் உணவு விநியோகம் செய்யும் இடத்தில் நடக்கும் கொலைகளைத் தீர்க்கும் பணியில் கதாநாயகன் இருக்கிறார்.
அமர்க்கள தீபாவளி 2023 (நேரலை)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11 நவம்பர், இரவு 10 மணி
வகை: இசை நிகழ்ச்சி
சிங்கப்பூர் தொகுப்பாளர்களான உதய சௌந்தரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து சுரேஷ் (ராகா) தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடனங்களும் அற்புதமானத் தொகுப்புகளும் இடம்பெறும்
கிக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், காலை 10 மணி
இயக்குநர்: பிரசாந்த் ராஜ்
நடிகர்கள்: சந்தானம், தன்யா ஹோப், மன்சூர் அலிகான் & மனோபாலா
வகை: நகைச்சுவை நாடகத் திரைப்படம்
கோபமான முதலீட்டாளர்களால் துரத்தப்பட்டப் பிறகு, ஓர் இளம் விளம்பர இயக்குனருக்குத் திடீரெனத் தலைமை நிர்வாக அதிகாரியின் மகனாக மாறுவேடமிட்டு உலகளாவிய நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
சிறப்பு ராசி பலன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், காலை 10.30 மணி
இயக்குநர்: ஆருந்திரா மதியழகன்
ஜோதிடம்: டாக்டர் சாரங்கபாணி (ஜோதிடர்)
வகை: ஜோதிடம்
இந்தத் தீபாவளி, உங்கள் ராசிகளுக்கு என்னப் பலன் தருகிறது என்பதைக் கண்டறிக. அருள் செல்வன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் டாக்டர் சாரங்கபாணி கலந்து கொள்வார்.
பி. சுசீலா 70 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், காலை 11 மணி
கலைஞர்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, வெண்ணிறடை நிர்மலா, பாரதி, லதா, காஞ்சனா, ஜெயசித்ரா, சச்சு, எஸ்பிபி சரண், உன்னி மேனன், ஆனந்து, முகேஷ், சாய் விக்னேஷ், எல்.ஆர். ஈஸ்வரி, கே.எஸ். சித்ரா, உமா ரமணன், அனுராதா ஸ்ரீராம், கல்பனா, ஸ்வேதா மோகன், மஹதி, சைந்தவி & பலர்
வகை: இசை நிகழ்ச்சி
பின்னணிப் பாடகியாக 70 பொன் ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுச் செய்த இந்தியச் சினிமாவின் நைட்டிங்கேல் பி.சுசீலாவை கௌரவிக்கும் நிகழ்ச்சி.
ரசிக்க ருசிக்க தீபாவளி ஸ்பெஷல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், பிற்பகல் 12.30 மணி
இயக்குநர்: நளினி தங்கராஜ்
தொகுப்பாளர்: பால கணபதி வில்லியம்
வகை: உணவு பயண நிகழ்ச்சி
பிரபலமான உணவு பயண நிகழ்ச்சி மேலும் பல உணவுச் சாகசங்களுடன் ஏழாவதுச் சீசனாக ஒளிபரப்பாகவுள்ளது.
பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருதுகள் 2023 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், பிற்பகல் 1.30 மணி
வகை: விருதுகள் நிகழ்ச்சி
திரைப்படத் துறையில் கலைஞர்கள் ஆற்றியப் பங்களிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்ச்சி. இவ்வாண்டுக் கொண்டாட்டத்தில் அல்லு அர்ஜுன், எஸ்திஆர், திரிஷா, ஏஆர் ரகுமான் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்!
அடை மழைக் காலம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், பிற்பகல் 2 மணி
இயக்குநர்: கார்த்திக் சாமளன்
நடிகர்கள்: எவராணி, ஜெய்கிஷன் & தியா லக்ஷனா
வகை: நாடகக் கற்பனைத் திரைப்படம்
நித்திய அன்பின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்வதற்கானப் பயணத்தைத் தொடங்கும் ஓர் இளைஞனின் கதை.

மாங்கல்யம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 4 மணி
இயக்குநர்: நசிரா இப்ராஹிம்
நடிகர்கள்: விகடகவி, சுகுமாரன், ஜேம்ஸ், தாஷா & ஹம்ஷினி பெருமாள்
வகை: காதல் நாடக டெலிமூவி
பெற்றோரின் கட்டாயப்படுத்தலால் திருமணத்தில் விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொண்ட மூன்று சகோதரர்கள் ஒரு வருடத்தில் தங்கள் மனைவிகளை விவாகரத்துச் செய்தனர். மூவரும் தங்கள் முன்னாள் மனைவிகளின் மீது காதல் வயப்படுவதால் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராதத் திருப்பம் ஏற்படுகிறது. அவர்கள் சமரசம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வார்களா?
ராங்கி ரகலை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 6 மணி
இயக்குநர்: ஷாலினி பாலசுந்தரம்
தொகுப்பாளர்: டேனேஸ் குமார்
வகை: ரியாலிட்டி நிகழ்ச்சி
பொது இடங்களில் கேளிக்கையானச் சவால்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை, டேனேஸ் குமார் தொகுத்து வழங்குவார்.
பேமிலி பியூட் மலேசியா தமிழ் (அத்தியாயம் 16 முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 7 மணி
இயக்குநர்: குமரன் ராமசாமி
தொகுப்பாளர்: ராம்
கலைஞர்கள்: ஷாமினி ஷ்ரதா, ஹரிஹரன், ஐரிஸ், ஹஸ்மிதா, விக்கி கசாடர், தாஷா, ஹூமேஷ் & ஜெய்ஸ்ரீ
வகை: விளையாட்டு நிகழ்ச்சி
மேடையில் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப் போட்டியிடும் இரு அணித் தலைவர்களுடன் விளையாட்டு தொடங்கும். அதிவேகமாகப் பசரை அழுத்தும் போட்டியாளருக்குப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும். கொடுக்கப்பட்டப் பதில் ‘ஆய்வுப்’ பதில்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருந்தால், அடுத்தடுத்தப் பதில்களை யூகிக்க அக்குழுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இல்லையெனில், பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளப் பதில்களை எதிரணியினர் யூகிக்க முயற்சிப்பர். பட்டியலில் இடம்பெரும் பதில்கள் உள்நாட்டில் 100 பங்கேற்பாளர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைந்தவையாகும். ரிம5,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்ல, விரைவானப் பணச் சுற்றில் (fast money) பங்கேற்க்க அதிக மதிப்பெண்களைப் பெற்ற அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
கனவு மெய்ப்படும் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12-15 நவம்பர், இரவு 8 மணி
இயக்குநர்: கபிலன் புளோண்டரன்
தொகுப்பாளினி: சுஷ்மீதா முருகன்
கலைஞர்கள்: தீபக் தேவரமேஷ், டாக்டர் ஜி பெருமாள், ஜீவராஜ் சந்தராஜு & தாரணி மாரியப்பன்
வகை: ரியாலிட்டி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிப் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும். மேலும் பாமர மக்கள் தங்களின் கனவுகளைத் தொடர ஊக்குவிக்கும். நம்பிக்கை, உத்வேகம் மற்றும் மிகவும் எதிர்பாராத வழிகளில் கூடக் கனவு நனவாகும் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்நிகழ்ச்சி உணர்த்தும்.




