spot_img
19.2 C
London
spot_img
Home சமூகம் தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களுக்கு டோல் இலவசம் -டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களுக்கு டோல் இலவசம் -டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா

0
278

கோலாலம்பூர், நவ.10-

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு 2 நாட்களுக்கு இலவச டோல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

   இந்த இலவச டோல் அமலாக்கம் இன்று நள்ளிரவு 12.01க்குத் தொடங்கி நாளை இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.

   இந்த டோல் கட்டண விலக்களிப்பு ஜோகூரிலுள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடிகளைத் தவிர இதர டோல் சாவடிகளில் வழங்கப்படும்.

   இம்முயற்சி மலேசியர்கள் குறிப்பாக இந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

   அதோடு மட்டுமின்றி பல்வேறு சமயம், இனம், நம்பிக்கையையும் தாண்டி மக்களின் சுமைகளைக் குறைக்க உதவும் வகையில் ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்குகளுக்கேற்ப இது அமைந்துள்ளது என்று ஓர் அறிக்கையில் காபிட் நாடாளுமன்ற உறுப்பினருமான அலெக்ஸாண்டர் நந்தா குறிப்பிட்டார்.