spot_img
19.7 C
London
spot_img
Home சிறப்புச் செய்திகள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்!அமைச்சர் சிவகுமாரின் தீபாவளி வாழ்த்து

வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்!அமைச்சர் சிவகுமாரின் தீபாவளி வாழ்த்து

0
277

புத்ரா ஜெயா அக் 11-
இருளை அகற்றி இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து அமைதியும், சுபீட்சமும் நீடித்திருக்க வேண்டும் என்பதே இந்த நன்னாளில் வாழ்த்துகளாகத் தாம் சமர்ப்பிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமுதாயம் ஒரு கல்வி கற்ற சமுதாயமாக திகழ வேண்டும் என்று மனதார வாழ்த்துவதாகக் கூறினார்.

“நமது மலேசிய நாட்டில் நமது சமூகத்தினர் உயர்ந்திட, அரசியல், பொருளாதாரம் கல்வி மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கி புதிய வியூகங்களோடு புத்தாக்க சிந்தனைகளோடு புதிய உருமாற்றங்களுக்கு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” .

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இன ,பேதமின்றி அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்கிறது.

“தேசிய நீரோட்டத்தில் இந்திய சமுதாயம் அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.இந்த அருமையான தருணத்தில் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் துன்பம் விலகி என்றும் ஒளி வீசட்டும் “என்று சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.