கோலாலம்பூர், செப்.27-

கிளந்தானில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண்கள் குட்டையான காற்சட்டையை அணிந்தால் அபராதம் விதிக்கபடும் என எதிர்பார்க்கபடுகின்றது.

புட்சால் விளையாடுவதற்காக குட்டையான காற்சட்டையை அணிந்த வான் கைருல் ஹாயி வாலி (வயது 30) என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக டெ ஸ்டார் இணையளத்தள செய்திபதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கடை ஒன்றில் சாதாரண ஊழியராக பணியாற்றிவரும் அவர் கடந்த திங்கள்கிழமை இரவு 10.45 அளவில் இந்த குற்றத்தை புரிந்ததாக நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வான் கைருல் கூறுகையில், தாம் படிக்கும் காலத்திலிருந்து புட்சால் விளையாடும் போது குட்டையான காற்சட்டையை அணிந்து விளையாடி வருவதாகவும் இப்படியொரு விதிமுறை இருப்பது தமக்கு தெரியாது என்றும் கூறினார்.

சமய அமலாக்கத்துறை அதிகாரி இந்த அபராத நோட்டிஸை எனக்கு வழங்கிய போது அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய முட்டிக்கால் தெரிகின்ற அளவில் தாம் காற்சட்டையை அணிந்து மாநில ஷரியா சட்டவிதியை மீறியிருப்பதாக அவர் சொன்னார்.

அடுத்த மாதம் என்னை ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். அப்படி வரவில்லை என்றால் ஷரியா நீதிமன்றத்தில் தாம் நிறுத்தப்படவிருப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1000 வெள்ளி வரையில் அபராதம் விதிக்கபடும் என அந்த அதிகாரி கூறியதாக வான் கைருல் கூறினார்.

இதனிடையே, கிளந்தான் மாநில சமய பிரிவு இந்த உடைகள் அணியும் விதிமுறையை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே நிர்ணயித்துள்ளதாகவும் இஸ்லாம் அல்லாதவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.