பி 40 சிறார்களுக்கு இலவச பரதநாட்டிய வகுப்புகள்!

54

கோலாலம்பூர், நவ.15-

மலேசிய பாரம்பரிய  கலை கலாச்சார  சங்கத்தின் ஏற்பாட்டில் 8 முதல் 19 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்காக இலவச  பரதநாட்டிய வகுப்புகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த  அடிப்படை  பரதநாட்டிய வகுப்புகள் ஜோகூர், மலாக்கா,சிலாங்கூர்,பேரா, பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் என்று இச்சங்கத்தின் தோற்றுநர் தேவி லெட்சுமணன் கூறினார்.

ஒரு வருடத்திற்கு மட்டுமே நடைபெறும் இந்த  இலவச பரதநாட்டிய வகுப்புகளில் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.  அதோடு, இவர்கள் மலேசியர்களாக இருக்க வேண்டும். 

https://forms.gle/pniCmW898zu6Xg8AA எனும் லிங்கை கிளிக் செய்து பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பின்னர் சங்க நிர்வாகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களுடன்  தொடர்பு கொள்வர் என்றார் தேவி.

பதிவுக்கான இறுதி நாள் நவம்பர் 20 ஆம் தேதியாகும்.