spot_img
16.6 C
London
spot_img
Home சமூகம் தண்ணீர் கையிருப்பு பற்றாக்குறை முதலீட்டை பாதித்து விடும் -சார்ல்ஸ் சந்தியாகோ

தண்ணீர் கையிருப்பு பற்றாக்குறை முதலீட்டை பாதித்து விடும் -சார்ல்ஸ் சந்தியாகோ

0
253

பெட்டாலிங் ஜெயா, நவ.16-

அந்நிய முதலீடுகளைக் கவர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாகத் தண்ணீர் விநியோகம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர், சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.

தண்ணீர் விநியோகப் பற்றாக்குறை மலேசியாவில் முதலீடு செய்ய எண்ணம் கொண்டுள்ள அந்நிய நிறுவனங்களின் முயற்சிகளை பாதித்து விடும்.

மலேசியாவில் இன்னும் சில ஆண்டுகளில் வெ.700 கோடியை முதலீடு செய்வதற்கு ஐரோப்பிய நிறுவனம் ஒன்று திட்டமிட்டிருப்பதையும் சார்ல்ஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டினார்.

அவர்கள் மலேசியாவில் செயல்படுவதற்குத் தயாராகி விட்டனர் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

-எப்.எம்.டி.