ஸ்பான்–எம்.ஜி.டி.சி ஒத்துழைப்பு: 2050க்கு முன்பே சுழிய கரியமில நிலை! -சார்ல்ஸ் சந்தியாகோ நம்பிக்கை

51

கோலாலம்பூர், நவ.17-
வரும் 2050ஆம் ஆண்டுக்கு முன்பே சுழிய கரியமில நிலையை அடையும் நாட்டின் இலக்கைப் பூர்த்தி செய்ய மலேசிய பசுமைத் தொழில்நுட்பப் பருவநிலை மாற்ற (எம்.ஜி.டி.சி.) நிறுவனத்துடன் குறைந்த கார்பன் செயல்பாட்டு முறை (எல்.சி.ஒ.எஸ்.) செயலியின் பயன்பாடு வாயிலாக ஒத்துழைக்க தேசிய தண்ணீர் சேவை ஆணையம் (ஸ்பான்) முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அதன் தலைவர், சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் எரிவாயுவின் அளவைக் கண்காணித்து அதுபற்றித் தெரிந்து கொள்வதற்காக எல்.சி.ஒ.எஸ். மேம்படுத்தப்பட்டது.

தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள அனைத்து 13 தண்ணீர் சேவை மற்றும் திடக்கழிவு உரிம நிறுவனங்களுக்கு 2 ஆண்டுக்கு 368,265.20 வெள்ளியை எல்.சி.ஒ.எஸ். சந்தா தொகைக்காக ஸ்பான் செலவழித்துள்ளது.

அந்த வகையில் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில் ஆபரேட்டரின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை அளவிடத் தொடங்கும் கண்காணிப்பு அமைப்பாக ஸ்பான் விளங்குகிறது என்று ஸ்பான்-எம்.ஜி.டி.சி.யுடனான ஒத்துழைப்புத் தொடக்க விழாவில் உரையாற்றிய போது சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

படம்:பெர்னாமா