உலு சிலாங்கூர் சிலம்பம் அகாடமியின் பட்டைய தேர்வு!

251

கெர்லிங், டிச.7-

உலு சிலாங்கூர் சிலம்பம் அகாடமி ஏற்பாட்டில்  மாணவர்களின் பட்டைய தேர்வு  மிகச்  சிறப்பாக நடைபெற்றது.

கெர்லிங் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில்  நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாஸ்டர் வே. சவரிமுத்து தலைமையில்  கண்ட்ரி ஹோம்ஸ், கம்போங் கோஸ்கான், மைகீத்தா சூரியன் தங்கும் விடுதி கெர்லிங் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 50 மாணவர்கள்  இதில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு சிலம்ப அகாடமி மலேசியா மஹாகுரு அம்பிகா ஆறுமுகம் சிறப்பு வருகை புரிந்தார். நிகழ்வில், கலந்து கொண்ட  மாணவர்களுக்கு மஹாகுரு அம்பிகா ஆறுமுகம் நற்சான்றிதழ்கள்  எடுத்து வழங்கினார்.

சிலம்பக் கலை மீது மாணவர்கள் கொண்ட ஆர்வம்  மெய் சிலிர்க்க வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்நிகழ்வுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றோர்களுக்கு மாஸ்டர் வே. சவரிமுத்து நன்றி  தெரிவி்த்துக் கொண்டார்.