spot_img
17.5 C
London
spot_img
Home சமூகம் மனிதவள அமைச்சர் பதவியை ஸ்டீவன் சிம்மிடம் முறையாக ஒப்படைத்தார் சிவகுமார்!

மனிதவள அமைச்சர் பதவியை ஸ்டீவன் சிம்மிடம் முறையாக ஒப்படைத்தார் சிவகுமார்!

0
167

புத்ரா ஜெயா டிச 13-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த புதிய அமைச்சரவையில் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டீவன் சிம் புதிய மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

இன்று காலையில் புதிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மனிதவள அமைச்சர், ஸ்டீவன் சிம் புத்ரா ஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சுக்கு வருகை புரிந்தார் . அப்போது புதிய துணை அமைச்சர், டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் ரஹ்மான் முகமட் உடன் இருந்தார்.

அவருக்கு அமைச்சின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

பிற்பகல் 2.00 மணியளவில் முன்னாள் மனிதவள அமைச்சர், வ.சிவகுமார் மற்றும் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்மூட் ஆகியோர் வருகை புரிந்தனர்.

பின்னர் நடைபெற்ற பதவி ஒப்படைப்பு நிகழ்வில் வ.சிவக்குமார் தனது அமைச்சர் பதவியை முறையாக ஸ்டீவன் சிம்மிடம் ஒப்படைத்தார்.

கடந்த ஓர் ஆண்டில் மிகச் சிறந்த முறையில் மனிதவள அமைச்சராக பணியாற்றிய சிவகுமாருக்கு மனிதவள அமைச்சு நன்றியைத் தெரிவித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது