Homeசமூகம்கோவிட்டை கண்காணிக்க மீண்டும் மை செஜாதெராவை பயன்படுத்துவீர்! -கைரி ஜமாலுடின் வலியுறுத்து

கோவிட்டை கண்காணிக்க மீண்டும் மை செஜாதெராவை பயன்படுத்துவீர்! -கைரி ஜமாலுடின் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச.15-


நாட்டில் கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மை செஜாத்ரா செயலியின் பயன்பாடு உட்பட 5 அணுகுமுறைகள் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் முன்னாள் அனைத்துலக வாணிப தொழில்துறை துணை அமைச்சர் ஒங் கியான் மிங் ஆகியோர் தெரிவித்தனர்.

இச்செயலியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கோவிட் நோயாளிகளின் சுகாதார நிலையைக் கண்காணித்து அறிக்கையைக் கொடுக்க முடியும்.

அதே சமயம் தொற்றின் புதிய தரவுகளை ஆய்வு செய்ய தரவு பகுப்பாய்வு குழுவை அமைச்சு நியமிக்க வேண்டும் அல்லது தரவு ஆய்வு செய்யும் திறன் கொண்ட இதர தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும்.

இது வசிப்பிடம், வேலை செய்யும் இடம் மற்றும் மற்ற நோயாளி மக்கள் தொகை தரவு ஆகியவற்றை அடையாளம் காண்பதற்கு ஆகும். அதே சமயம் தரவுகளை ஆய்வு செய்ய உதவுவதற்கு பொது தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓர் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.

-பெரித்தா ஹாரியான்

spot_img

latest articles

explore more