spot_img
14.5 C
London
spot_img
Home சமூகம் செந்தூல் நாகம்மன் ஆலயம் உடைபட்ட விவகாரம்: ஆலய நிர்வாகமே முழு காரணம்! பத்து நாடாளுமன்ற...

செந்தூல் நாகம்மன் ஆலயம் உடைபட்ட விவகாரம்: ஆலய நிர்வாகமே முழு காரணம்! பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சாடல்

0
297

கோலாலம்பூர், டிச.20-

இங்குள்ள செந்தூல், கம்போங் ரயில்வே அருள்மிகு நாகம்மன் ஆலயம் உடைபட்ட விவகாரத்திற்கு இதன் நிர்வாகமே முழு காரணம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சாடினார்.

“ஆலயத்தை உடைக்கும் ஒய்டிஎல் நிறுவனத்தின் நடவடிக்கையை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றது, ஒய்டிஎல் நிறுவனம் மற்றும் ஆலய செயலாளருடன் பேச்சு நடத்தியது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் நான் மேற்கொண்டுள்ளேன்” என்றார் பிரபாகரன்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் செந்தூல் வட்டார ஆலயங்களை இடமாற்றம் செய்யும் பட்டியலில் அருள்மிகு நாகம்மன் ஆலயமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், இதற்கு ஆலயம் இணக்கம் தெரிவிக்கவில்லை. மூன்று , நான்கு ஆலயங்கள் இழப்பீடு தொகையைப் பெற்றுக் கொண்டு இடம் மாறிவிட்டன. பெரிய நிலத்தை மற்ற ஆலயங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் புற்று இருந்த காரணத்தினாலும் கூடுதல் இழப்பீடு கோரியதாலும் நாகம்மன் ஆலயம் இடம் மாறவில்லை.

கோயில் ஒப்புக் கொண்டால் மட்டுமே ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய முடியும் என்று ஒய்டிஎல் நிறுவனம் கூறியது.1 லட்சம் வெள்ளி இழப்பீட்டு தொகையுடன் புத்தர் ஆலயத்தின் அருகில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், ஆலய நிர்வாகம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 13 வருடகால வழக்கில் ஆலயம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்று ஒய்டிஎல் நிறுவனம் கூறியது.

இந்நிலையில் தற்போது ஆலயம் உடைபட்ட பின்னர் எங்களுக்கு 5,000 சதுர அடியில் நிலமும் 12 லட்சம் வெள்ளி இழப்பீடும் வேண்டும் என்று இவர்கள் கோருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று பிரபாகரன் வினவினார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, கோவில் எப்போது திறக்கப்படும் போன்ற விவரங்கள் அடங்கய பத்திரம் எதனையும் ஆலய நிர்வாகத்தினர் கொண்டிருக்கவில்லை.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலேஹா முஸ்தாபாவுடன் தாம் இந்த வாரம் பேச்சு நடத்தவிருப்பதாக பிரபாகரன் சொன்னார்.