வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > வட கொரியா செல்ல மலேசியர்களுக்குத் தடை!
முதன்மைச் செய்திகள்

வட கொரியா செல்ல மலேசியர்களுக்குத் தடை!

புத்ராஜெயா, செப்.28 – 

வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள மலேசியர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக  வெளியுறவுத்துறை அமைச்சு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சிடம் இருந்து அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் வரை மலேசியர்கள் வட கொரியாவுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயத சோதனைகளின் காரணமாக அமெரிக்க உட்பட பல நாடுகள்  அதிருப்தியில் உள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எந்நேரத்திலும் கொரிய தீபகற்பத்தில் போர் மூளக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் மலேசியர்களுக்கு வட கொரியா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய கால்பந்து அணி ஹரிமாவ் மலாயா, அக்டோபர் 5 ஆம் தேதி வட கொரியாவில் 2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் தகுதி சுற்றில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது.

எனினும் மலேசிய கால்பந்து அணியின் பயணம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன