spot_img
10.4 C
London
spot_img
Home சமூகம் கேமரன் மலையில் நிலச்சரிவு: ஒருவர் மரணம்; நால்வர் தேடப்படுகின்றனர்!

கேமரன் மலையில் நிலச்சரிவு: ஒருவர் மரணம்; நால்வர் தேடப்படுகின்றனர்!

0
336

குவாந்தான், ஜன. 26-

கேமரன் மலை, புளுவேலி 54ஆவது மைலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் மரணமுற்றார். நால்வர் மண்ணில் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலச்சரிவு இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டதாகவும் இது குறித்து விடியற்காலை 2.51 மணியளவில் தங்களுக்குக் தகவல் கிடைக்கப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் புதையுண்ட நான்கு பேரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்..

தொடக்க கட்ட விசாரணையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இன்னும் சிக்கிக் கொண்டிருப்பது அறியப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் வழி இஸ்மாயில் சுட்டிக் காட்டினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார் அவர்.