spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் ‘அங்கிள் கெந்தாங்’ மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு!

‘அங்கிள் கெந்தாங்’ மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு!

0
318

கோலாலம்பூர், ஜன.30-

இங்குள்ள செராஸ் மருத்துவமனை நோயாளிகளுக்கு வசதியாக மலேசிய அங்கிள் கெந்தாங் சமூகநல அமைப்பு 3 சாதனங்களை வழங்கியது.

நோயாளிகள் படுக்கையிலிருந்து சற்று எழுந்து உட்காருவதற்கு இச்சாதனங்கள் உதவும் என்று அவர் சொன்னார்.

இந்த சாதனங்கள் ஒன்றின் மதிப்பு சுமார் 5,000 வெள்ளி ஆகும் என்று இங்கு நடைபெற்ற ‘ஜோம் செஹாட் மடானி மருத்துவ முகாம்’ நிகழ்ச்சியில் இச்சாதனங்களை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா மருத்துவ துறை இயக்குநர் டாக்டர் நோர் அய்ஷா அபு பாக்கார் மற்றும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையின் வருகையாளர் ஆலோசனை வாரியக் குழு தலைவர் என்றி லாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.