சீனப் புத்தாண்டை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் இலவச டோல்! -டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர்

68

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-

வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பயனர்கள் இலவச டோல் அனுகூலத்தைப் பெறலாம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

நாளை (வியாழன்) நள்ளிரவு 12.01 தொடங்கி மறுநாள் இரவு 11.59 மணி வரை அனைத்து வகை வாகனங்களும் இந்த இலவச டோல் பொருந்தும் என அவர் சொன்னார்.

  எனினும், இந்த விலக்களிப்பில் பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் டோல் சாவடி (ஜோகூர் பாலம்), தஞ்சோங் குப்பாங் (லிங்கெடூவா நெடுஞ்சாலை, ஜோகூர்) ஆகியவை உட்படுத்தப்படவில்லை.

    இலவச டோல் வழங்கும் இந்த அணுகுமுறை மக்களின் சமூகநலன் மீது கவனம் செலுத்தும் அரசின் இலக்கிற்கு ஏற்ப இருப்பதோடு அவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பதற்கும் உதவியாய் இருக்கிறது என்று ஓர் அறிக்கையில் காபிட் நாடாளுமன்ற உறுப்பினருமான அலெக்ஸாண்டர் குறிப்பிட்டார். 

-எப்.எம்.டி.