spot_img
10.3 C
London
spot_img
Home சமூகம் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு! -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு! -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

0
281

சைபர்ஜெயா, பிப்.17-


அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் புற்றுநோயாளிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் ஒரு மாதமாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இருந்த போதிலும் ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அது உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும் இது நோயாளிகளின் நிலையைப் பொறுத்தது, காரணம் நிலைமை மோசமாகி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இதன் அடிப்படையில் தற்போதைக்கு நாடு முழுவதும் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை மேற்கொள்ள உதவும் வகையில் 9 புற்றுநோயியல் மையங்களை அமைச்சு அமைத்துள்ளதாக இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிப்ளி இவ்வாறு குறிப்பிட்டார்.

-பெர்னாமா