புகை பிடிப்பதற்கான பிரத்தியேக பகுதி இன்னும் முடிவாகவில்லை! -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

101

கோலாலம்பூர், பிப்.19-

குறுகிய இடம் கொண்ட உணவகங்களில் புகை பிடிப்பதற்கான பிரத்தியேக பகுதியை அமைக்கும் பரிந்துரை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உணவக உரிமையாளர்கள் உட்பட பொதுமக்களின் பரிந்துரைகளையும் அமைச்சு திறந்த மனதுடன் ஏற்று கொள்ளும்.

“இதுதான் நமது உண்மையான கருத்து. இதற்கான கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்களை அமைச்சு உட்படுத்தும். அப்படி புகைபிடிக்க ஏதேனும் பிரத்தியேக பகுதி கோரப்பட்டால் அதை பரிசீலித்து நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும் அமைச்சு ஆராயும்” என்றார்.

“பரிந்துரைகளை நாங்கள் செவிமடுப்போம், ஆனால் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம்” என்று எண்ணெய் மற்றும் கொழுப்பிற்கான 28ஆவது கோடெக்ஸ் செயற்குழு மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிப்ளி இவ்வாறு குறிப்பிட்டார்.