மலேசிய மடானி வெள்ளை அரிசி பரிந்துரை: முறையற்ற வாணிக கும்பலின் தலையீட்டை தடுக்கும்! -பிரதமர் நம்பிக்கை

230

கோலாலம்பூர், பிப்.19-

மலேசிய மடானி வெள்ளை அரிசியை அமல்படுத்தும் பரிந்துரையானது முறையற்ற வாணிகக் கும்பலின் தலையீட்டை தடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் அமலாக்கம் குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை, மாறாக தேசிய வாழ்வாதார நடவடிக்கை மன்ற சிறப்பு கூட்டத்தில் (என்.ஏ.சி.சி.ஒ.எல்.) இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.

மடானி வெள்ளை அரிசி உண்மையில் முறையற்ற வாணிக கும்பலை ஆதரிப்பதற்காக அல்ல. இது அக்கும்பலின் தலையீட்டைத் தடுக்கும். இவ்விவகாரம் தொடர்பில் என்.ஏ.சி.சி.ஒ.எல். கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதுகுறித்து எந்த முடிவும் செய்யப்படவில்லை என்று மே பேங்க் வங்கி ஊழியர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

-பெரித்தா ஹாரியான்