கோலாலம்பூர், மார்ச் 1-
சிறந்த தமிழ் நூலுக்கான “பெருந்தமிழ் விருது” பத்மபூஷன் கவிப் பேரரசு வைரமுத்துவின் ‘மகா கவிதை’ படைப்புக்கு வழங்கப்படவிருக்கிறது.
மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த விருது விழா இம்மாதம் 8ஆம் தேதி தலைநகர் புத்ரா வாணிப மையத்தில் நடைபெறும்.
கவிப் பேரரசு வைரமுத்துவின் ஐம்பூதங்களை உள்ளடக்கிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு ‘மகா கவிதை’யாகும். உளவியல், மனோ தத்துவம் என்று எல்லா கூறுகளையும் உட்படுத்தி தமிழ்ச் சமுதாயத்திற்குக் கொடுத்துள்ளார்.
தமிழை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் கரங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பெருந்தமிழ் விருது விழா தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் சரவணன் விவரித்தார்.




