spot_img
8.5 C
London
spot_img
Home அரசியல் பினாங்கு மைபிபிபி மகளிர் பிரிவின் மகளிர் தின கொண்டாட்டம்!

பினாங்கு மைபிபிபி மகளிர் பிரிவின் மகளிர் தின கொண்டாட்டம்!

0
311

ஜோர்ஜ்டவுன், மார்ச் 13-


பினாங்கு மாநில மைபிபிபி மகளிர் பிரிவு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300 பெண்களுக்கு ரோஜா மலர்களை வழங்கி மகளிர் தினத்தை இனிதே கொண்டாடியது.

பினாங்கு மாநில மைபிபிபி மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி தண்ணிமலை தலைமையில் இங்குள்ள லெபோ பாசாரில் (லிட்டல் இந்தியா) 300 பெண்களுக்கு ரோஜா மலர்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மைபிபிபி இடைக்கால தலைவரும் பினாங்கு மாநில மைபிபிபி தலைவருமான டத்தோ லோக பாலா சிறப்பு வருகை புரிந்தார்.

மாநில மைபிபிபி மகளிர் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனிச்சல் வெட்டி உலக மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டும் வகையில் மைபிபிபி தேசிய மகளிர் பிரிவு தலைவி புனிதா முனுசாமி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.