spot_img
8 C
London
spot_img
Home மலேசியா கல்வி பாலர் பள்ளி பயிற்சி வழி பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவீர்!

பாலர் பள்ளி பயிற்சி வழி பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவீர்!

0
305

கோலாலம்பூர், மார்ச் 13-

நாட்டில் பாலர் பள்ளிகளுக்கு எப்போதுமே தேவை அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாலர் பள்ளி ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த துறையில் காணப்படும் வேலை வாய்ப்புகளைப் பெற்றோர்கள் அறிந்திருக்காத காரணத்தினால் இத்துறையில் பயில தங்கள் பிள்ளைகளை இவர்கள் ஊக்குவிப்பதில்லை என்று சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் விரிவுரையாளரான செல்வராணி ஆறுமுகம் கூறினார்.

ஆசிரியர், விரிவுரையாளர் போன்ற வேலை வாய்ப்புகள் இத்துறையில் காத்திருக்கின்றன. பயிற்சியை முடித்து நல்ல அனுபவம் பெற்ற பின்னர் சொந்தமாக பாலர் பள்ளி திறக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்று சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் மற்றொரு விரிவுரையாளரான ஷண்முகப்ரியா ஆறுமுகம் தெரிவித்தார்.

மலேசிய திறன்பயிற்சி சான்றிதழ் கீழ் நடத்தப்படும் இப்பயிற்சியில் பிடிபிடிஎன் கடனுதவி ஏற்பாடு செய்து தரப்படும். பயிற்சியை முடித்த பின்னர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதன் பொருட்டு இந்திய மாணவர்கள் பாலர் பள்ளி கல்வி பயில முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

எஸ்.பி.எம். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பாதகமில்லை. ஆசிரியராக வேண்டுமென்ற கனவு இருந்தால் போதுமானது. இப்பயிற்சியில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என்று இந்திய மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் 7ஆவது பட்டமளிப்பு விழா மலாயா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.