spot_img
12.2 C
London
spot_img
Home சமூகம் நம்பிக்கை இவென்ஸ் ஏற்பாட்டில் டத்தோஸ்ரீ ஜியுடன் உலக மகளிர் தின கொண்டாட்டம்! -ஊடகத் துறையைச் சேர்ந்த...

நம்பிக்கை இவென்ஸ் ஏற்பாட்டில் டத்தோஸ்ரீ ஜியுடன் உலக மகளிர் தின கொண்டாட்டம்! -ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பு

0
423

பூச்சோங், மார்ச் 17-

நம்பிக்கை இவென்ஸ் டத்தோஸ்ரீ ஜியுடன் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

இங்குள்ள இந்தியா கேட் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் பத்திரிகை, வானொலி-தொலைக்காட்சி மற்றும் மின்னியல் ஊடகத் துறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த நம்பிக்கை இவென்ஸ் மற்றும் டத்தோஸ்ரீ ஜி ஆகியோருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டில் ஊடகத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூவர் சிறப்பிக்கப்பட்டனர்.

தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா, மலேசிய நண்பன் செய்தி ஆசிரியர் ராஜேஸ்வரி கணேசன் மற்றும் அநேகன் ஆசிரியர் தா.சரளா தேவி ஆகியோரே அந்த மூவர்.

பெண்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் அதே சமயத்தில் அவர்கள் என்றும் போற்றப்படக்கூடியவர்கள் என்பதை வலியுறுத்தும் இந்த நிகழ்ச்சியைச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்தமைக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனைவரும் நன்றி கூறினர்.

சுவையான உணவுடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் அனிச்சல் வெட்டப்பட்டதோடு வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.