கோலாலம்பூர், மார்ச் 18-
தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் சித்தரிக்கும் செம்மையான சாப்பாடு எனும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
பிரபல உள்ளூர் திறமையான சாய் கோகிலா தனது மகள்களான நவினியா முரளி மற்றும் லிஷாலினி முரளி மட்டுமல்லாது இரட்டை மகள்களான ஜஸ்விந்த் முரளி மற்றும் ரோஸ்விந்த் முரளி ஆகியோருடன் இணைந்து சமைக்கும் பல்வேறு சுவையான மற்றும் தனித்துவமான பாரம்பரிய கிராமத்துச் சமையல் வகைகளைக் காண்பிக்கும் இந்தச் சமையல் நிகழ்ச்சி மார்ச் 15 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
பாரம்பரிய சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில் நாவிற்கு விருந்தாகத் தயாரிக்கப்படும் பலவிதமான பாரம்பரிய கிராமத்துப் பாணியிலான சமையல் வகைகளைக் காண்பிக்கும், பிரபல உள்ளூர் இயக்குநர் எம்.எஸ். பிரேம் நாத் இயக்கியச் செம்மையான சாப்பாடு சமையல் நிகழ்ச்சி ஒரு அத்தியாயத்தைக் கூடத் தவறவிட விரும்பாத இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. ‘பசங்க’, ‘ஒரு கதை சொல்லட்டா சார்’, ஆஸ்ட்ரோ செய்திகள், தமிழன் லயன் டான்சர்ஸ் மற்றும் பலவற்றின் உள்ளூர் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குழு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு விருந்தோம்பல் வழங்கப்படும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி என்ற பெருமையை அடையும் இந்தத் தனித்துவமான நிகழ்ச்சி மனிஷா தங்கவேலு, சுகந்தி மற்றும் பவித்ரா போன்ற புதுமுகத் தொகுப்பாளர்களைக் கலைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதின் வழி உள்ளூர் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடுக் கனவுகளை மெய்ப்பிக்க மதிப்புமிக்க தளத்தை வழங்கும் ஆஸ்ட்ரோவின் தொடர்ச்சியான முயற்சியை உறுதிப்படுத்துகிறது.
தயிர் சாதம், பட்டர் சப்பாத்தி, புதினாப் பட்டர் சப்பாத்தி, பலாப்பழ குழம்பு, லெமாங், மூருங்கைக்காயுடன் கோழி ரெண்டாங், சுரைக்காய் ஆட்டிறைச்சி, மாங்காய் சாதம், கருவாட்டுக் குழம்பு, கடலைக் குழம்புடன் புட்டு, பன்னீர் பட்டர் மசாலா, காளான் மசாலா மற்றும் பலவிதமான சுவையான சமையல்களை இந்தச் சமையல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியை ஃபெர்ன்லீஃப் நிதி வழங்கி ஆதரிக்கின்றது.
பல்வேறு பாரம்பரிய சமையல் வகைகளை அறிந்து கொள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.




