ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2: கால் இறுதிக்கு முன்னேறிய சிறந்த 16 போட்டியாளர்கள்!

74

கோலாலம்பூர், மார்ச் 19-

ஹிட் சுற்றில் தீவிரமான போட்டிக்குப் பிறகு காலிறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாக முன்னேறும் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் சிறந்த 16 போட்டியாளர்களை ஆஸ்ட்ரோ அறிவித்தது.

பெர்ம சந்திரா, யாசஸ்கரன், சாருஹாஷினி, ஜீவன்ராஜ், திஷாலன், உன்னிதெய்வன், நித்தியன், நிஷாதேவி, நேசன், ரம்யா, ஷெர்லி, தேவஸ்வரா, யோஷினி, திவ்யா மற்றும் லச்மன் ஆகிய சிறந்த 16 போட்டியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

புதிய உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்ந்து, ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் தங்கள் இலக்குகளைத் தொடர இந்தத் தளத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2, பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பல்துறையில் பிரசித்திப் பெற்றச் சர்வதேச நட்சத்திரமான யுகேந்திரன் வாசுதேவனோடு நடுவர்களாகக் கைக்கோர்க்கும் உள்ளூர் இசைத் துறையைச் சேர்ந்தப் பாடகர்களான டாக்டர் பர்ன் மற்றும் ப்ரீத்தா பிரசாத் அவர்களைத் தாங்கி மலர்கிறது. அதுமட்டுமின்றி, எதிர்வரும் சுற்றுகளில் மிகவும் கடுமையான போட்டியை எதிர்க்கொள்ளப் போட்டியாளர்கள் அவர்களின் குரல் திறனை மேலும் செவ்வென வளர்த்துக் கொள்ள அவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுவார் புகழ்பெற்ற உள்ளூர் பாடல் இசையமைப்பாளரான ஜெய்.

குக்கூ நிதி ஆதரவாளராக திகழும் இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதோடுக் குக்கூ தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:
• முதல் நிலை வெற்றியாளர்: ரிம50,000, குக்கூ கிராண்டே நீர் சுத்திகரிப்பான் (Cuckoo Grande Water Purifier) மற்றும் ராக்கெட்பியூல் என்டர்டெயின்மென்ட்-இன் (Rocketfuel Entertainment) திறமையாளராகும் ஓர் அறிய வாய்ப்பு;
• இரண்டாம் நிலை வெற்றியாளர்: ரிம25,000 மற்றும் குக்கூ யு மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo U Model Air Purifier);
• மூன்றாம் நிலை வெற்றியாளர்: ரிம10,000 மற்றும் குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர் (Cuckoo P10 Pressure Multi-Cooker); மற்றும்
• ஆறுதல் பரிசுகள்:
o இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 2): ஒவ்வொருவருக்கும் தலா ரிம5,000; மற்றும்
o இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 1): ஒவ்வொருவருக்கும் தலா ரிம3,000

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியானப் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழ இப்போதே ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பின் சந்தாதாரராகுங்கள்.

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள். சீசன் 1-ஐக் காணத் தவறவிட்டுவிட்டீர்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.