மலேசிய ‘மக்கள் ஓசை’ புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதி உருவாக்கிய ‘இளைய தமிழவேள் ஆதிகுமணன்’ எனும் நூல் பொள்ளாச்சியில் ஆதிகுணன் பெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளைப் பொறுப்பாளராகவும் நல்லமுத்து மகாலிங்கம்
கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ள பேராசிரியர் முனைவர் பே.மகேஸ்வரியிடம் வழங்கப்பட்டது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன் வழங்கிய 300 நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இளைய தமிழவேள் ஆதிகுமணன் நூலும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மேற்கண்ட கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் க.தனலட்சுமி, முனைவர் ப.மகேஸ்வரி, ர.சூர்யா, லெ.முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.




