spot_img
6.2 C
London
spot_img
Home சமூகம் தொழிற்துறையில் உருமாற்றத்தை அதிகரிப்பீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

தொழிற்துறையில் உருமாற்றத்தை அதிகரிப்பீர்! -சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

0
206

கோலாலம்பூர், ஏப்.25-

எரிசக்தி, தண்ணீர் உருமாற்ற அமைச்சு மற்றும் தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற தொழிற்துறையில் உருமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

மலேசிய அனைத்துலக தண்ணீர் மாநாடு 2023க்கான கருப்பொருள் தண்ணீர் துறை உருமாற்றத்திலுள்ள வாய்ப்புகள், சவால்கள் மற்றும் இஎஸ்ஜி அமலாக்கம் ஆகும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

இத்துறையில் உருமாற்றத்தை அதிகரிப்பதே எரிசக்தி, குடிநீர் உருமாற்ற அமைச்சு மற்றும் தேசிய தண்ணீர் சேவை ஆணையத்தின் நீண்ட நாள் கனவாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

   “சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீர் கையிருப்புக்குத் தொடர்சியான அணுகல் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். தண்ணீர் உரிமை தொடர்பில் ஐ.நா.வின் 15ஆவது விதியில் கூறப்படுவது என்னவென்றால் அந்த உரிமையை ஆய்வு செய்வதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது. அதனால் நாட்டின் முதன்மை பாதுகாப்பு அம்சமாகத் தண்ணீரை வலியுறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது தண்ணீர் பாதுகாப்பு விவகாரத்திற்கு உடனடி தீர்வு காணப்படுவதை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கான ஒரு முன்நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது” என்றார் சார்ல்ஸ்.

   தண்ணீர் என்பது வரையறுக்கப்பட்ட வளமாகும். இப்போது உலகளவில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு அதன் தரமும் சரிந்து வருகிறது. முன்பு இல்லாத அளவுக்கு இப்போது மிகவும் மோசமான தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் மக்கள் தொகை அதிகரிப்பு, நிலையற்ற பயன்பாட்டு முறை, தூய்மைக்கேடு, பருவநிலை மாற்றம் ஆகியவை தண்ணீர் நெருக்கடியை இன்னும் மோசமாக்கி விடுகின்றன என்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.