spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொன்னவர்களுக்கு வாக்களிப்பதா? -பாப்பாராயுடு காட்டம்

தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொன்னவர்களுக்கு வாக்களிப்பதா? -பாப்பாராயுடு காட்டம்

0
214

கோலாலம்பூர், ஏப்.30-

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொன்ன தரப்பினருக்கு வாக்களிப்பதா என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு ஆவேசமாகப் பேசினார்.

இதுபோன்ற இன பாகுபாடு கொண்டவர்களுக்கு வரும் கோல குபுபாரு இடைத் தேர்தலில் நாம் ஆதரிக்க வேண்டுமா என்று அவர் வினவினார்.

முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி இத்தேர்தலில் ஜசெகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் கூறி வருகிறார்.

அவர் பதவியில் இருந்தபோது இப்படியெல்லாம் பேசவில்லை. இன்று பதவி இல்லை என்றபோது கட்சியையும் அரசாங்கத்தையும் தனது விருப்பப்படி குறை கூறி வருகிறார்.

“நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட மக்களுக்காக வீதி போராட்டங்களில் களம் இறங்கக்கூடியவர்கள்” என்று இங்குள்ள உணவகத்தில் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் ஊடக துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக தரப்பினருடனான மதிய உணவு விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

கோல குபுபாரு இடைத்தேர்தல் ஒரு முக்கியமான இடைத்தேர்தல். காரணம், கோல குபு பாரு மக்கள் விகிதாச்சாரம் சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள் விதாச்சாரமாகக் கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு மலாய்க்காரர்கள் 50 விழுக்காடு, சீனர்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல், இந்தியர்கள் 18 விழுக்காடும் இருக்கின்றனர். அதே போல்தான் சிலாங்கூரிலும் இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் அரசாங்கத்திற்கு வெற்றி தரக்கூடிய இடைத்தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

நாட்டின் பிரதமர் அவரால் முடிந்த நல்ல காரியங்களை அறிவித்து வருகிறார், வேலை வாய்ப்புகள் ரீதியில் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதும் அடங்கும். மாநில ரீதியில் எடுத்துக் கொண்டால் குறிப்பாக செரெண்டா வட்டாரத்தில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். ஏனென்றால் அங்குள்ள வேலை வாய்ப்புகள் சாதாரணமானவை அல்ல. குறைந்தபட்சம் 10,000 வெள்ளி வருமானத்தை ஈட்டக்கூடிய பல வேலை வாய்ப்புகளும் உள்ளன.

” சில விஷயங்களில் குறைபாடுகள் இருந்தால் தயவு செய்து எங்களுடைய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்த வரையில் தீர்த்து வைக்க முயற்சி செய்கின்றேன். ஆனால் பல ஆண்டு காலமாக நிலுவையிலிருக்கும் பல விஷயங்களை இந்த இடைத்தேர்தலுக்காக நிறைவு செய்கிறேன் என்று சொன்னால் அதை யாரும் நம்பி விட வேண்டாம்.

“இது ஓராண்டு, ஈராண்டுகால பிரச்சனையல்ல, ஆண்டு ஆண்டு காலமாக உள்ள பிரச்சனைகளாகும். அவற்றை உடனடியாகத் தீர்த்து வைக்க முடியாது. இருப்பினும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் ரீதியில் என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன்” என்றார்.