spot_img
10.7 C
London
spot_img
Home தேர்தல் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்வீர்! -புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ்

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்வீர்! -புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ்

0
320

பெட்டாலிங் ஜெயா மே 8-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களுக்கு மன நிறைவான சேவையை வழங்கக்கூடிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்படி இத்தொகுதி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்கும் தங்களின் கடமையை இத்தொகுதி வாக்காளர்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷாகரன் வலியுறுத்தினார்.

மத்திய மற்றும் மாநில அரசின் உதவி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாலமாக விளங்கக்கூடிய வேட்பாளரே மிக முக்கியம் என்பதை ரஜீவ் சுட்டிக் காட்டினார்.

“பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவ் மக்களிடம் எளிதாகப் பழகக்கூடியவர்; இரக்க குணம் படைத்தவர்; ஐக்கியத்தை விரும்புவர்; அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றக்கூடியவர். மக்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்கக்கூடியவர்”.

“2018ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சுடன் ஒன்றிணைந்து பணியாற்றியபோது பாங்கின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையுணர்ச்சியை என்னால் நன்கு காண முடிந்தது ” என்றார்.

பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் பாங் வல்லவர். அனைத்திற்கும் மேலாக மலேசியர் என்ற உணர்வு இவரிடம் மேலோங்கியிருப்பது இவரின் மற்றொரு சிறப்பாகும் என்று அறிக்கை ஒன்றின் வழி ரஜீவ் விவரித்தார்.

“உங்களோடு இருக்கக்கூடிய, உங்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் மலேசியர்களாகிய நம் அனைவரின் சிறந்த எதிர்காலத்திற்காகப் பாடுபடக்கூடிய வேட்பாளரைத் தேர்வு செய்யும்படி கோல குபுபாரு வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அவர்.

“கோல குபுபாரு மற்றும் ஒட்டுமொத்த மலேசியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்றார்.