பிக் ஸ்டேஜ் சீசன் 2 வெற்றியாளர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்

62

கோலாலம்பூர், மே 12-

பிக் ஸ்டேஜ் சீசன் 2இன் வெற்றியாளர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலை கீழே காண்போம்.

உங்களை அறிமுகப்படுத்துவதோடு உங்களின் பாடும் திறமையை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?

ரூஹன்: எனது பெயர் ரூஹன் ரவீந்திரன். எனக்கு 22 வயது. நான் குவாந்தான், பகாங்கைச் சேர்ந்தவன். எனது 5ஆவது பிறந்தநாளின் போது சில பாடல்களைப் பாடிய போதுதான் எனது பாடும் திறமையை நான் முதன்முதலில் உணர்ந்தேன். அப்போது முதல் இசைக்குழுவில் பாடகர்களான எனது தாத்தா திரு.வெங்கீரசாமி @ வெங்கடேசன் மற்றும் எனது மாமா திரு.அப்பளசாமி உட்பட என் குடும்ப உறுப்பினர்கள் பாடும் ஆர்வத்தை என்னுள் தூண்டினர்.

திவ்யா: நான் திவ்யா சந்திரன். 9 வயதில் எனது இசைப் பயணம் தொடங்கியது. 10 வயதில் கர்நாடக வகுப்புக்குச் சென்றது எனது குரல் திறனை மேலும் வலுப்படுத்தியது.

நித்தியன்: நான் மலாக்காவைச் சேர்ந்த நித்தியன் கங்கா. நான் தற்போது ஒலி பொறியியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடரும் வேளையில், பகுதி நேர காப்பீட்டு முகவராகப் பணிபுரிகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் தந்தை என்னை திருமுறை வகுப்புகளுக்கு அனுப்பிய போது எனது பாடும் திறமையை நான் சிறு வயதிலேயே கண்டறிந்தேன். சுருதி, தாளம் மற்றும் ராகம் ஆகியவற்றை நான் அங்குக் கற்றுக் கொண்டேன். அதுவே எனது இசை ஆர்வத்தைத் தூண்டியது. அப்போது முதல் தமிழ் சினிமா பாடல்களைப் பாடுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அவற்றின் மெட்டு மற்றும் சொல்திறன்களில் மகிழ்ச்சியைக் கண்டேன். பாடுவது எனது ஆர்வமாக மாறியது. ஒவ்வொரு நாளும் எனக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மேலும், ஓர் இசையமைப்பாளராகப் பல அசல் பாடல்களை உருவாக்குவதன் மூலம் இசையின் மீதான எனது அன்பு மேலும் ஆழமானது.

ஒரு பாடகராக உங்கள் பயணத்தில் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2 எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தது?

ரூஹன்: பல்வேறு வகைகளிலான பாடல்களைப் பாடுவது மற்றும் பல்வேறு அளவிலான சவால்களைக் கொண்ட பாடல்களைப் பாடுவது உட்பட பாடுதல் மற்றும் படைப்புச் சார்ந்த பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன்.

திவ்யா: பல்வேறு வகைகளின் அடிப்படையில் பாடல்களைப் பாடுவதற்கான எனதுத் திறமையை மேலும் வலுப்படுத்தியதோடு எனது வசதிப் பிரதேசத்தை விட்டு பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2 என்னை வெளியேற்றியது.

நித்தியன்: என்னால் எனதுத் திறமையை வெளிப்படுத்த முடிந்ததால் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் பங்கேற்றது ஒரு பாடகராக எனக்கு மிக முக்கியமான தருணம். நிபுணர்கள், நீதிபதிகள் மற்றும் நிச்சயமாக எங்கள் வழிகாட்டுநரான ஜெய் சார் ஆகியோரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும் இப்போட்டி வழிவகுத்தது. அவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் எனது பாடும் திறனை மேலும் வலுப்படுத்த உதவியது. போட்டியில் என் பங்கேற்பு அதிகமான மக்கள் என்னை அடையாளம் காண அனுமதித்தது. எனவே, ஓர் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எனது இலக்கு என்னை நெருங்குவதை நான் உணர்ந்தேன்

   பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் பங்கேற்றதன் உங்களின் உத்வேகம் என்ன?

ரூஹன்: எனதுக் குடும்பமே எனது உத்வேகம். எனதுப் பாடும் திறனைக் கண்டறிந்தவர்களும் அவர்கள்தான். இசை/கலைத் துறையில் நான் சாதிக்க முயற்சிகளை எடுத்தபோது, எனக்குப் பக்கபலமாக அவர்கள் இருந்தனர். இசையின் மீதான ஆர்வத்தினால், இசை/கலைத் துறையில் எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திவ்யா: சிறந்த படைப்பாளராக எனது திறமையை நிரூபிக்க இந்த போட்டியில் பங்கேற்றேன்.

நித்தியன்: பாடும் துறையில் எனதுக் கனவுகளைத் தொடர என்னைத் தூண்டிய எனது சகோதரர், ஹரிஹரன் கங்காவின் ஆதரவும் ஊக்கமும் உட்பட இசையின் மீதான எனது அசைக்க முடியாத பேரார்வம் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் பங்கேற்பதற்கான எனது மிகப் பெரிய உத்வேகமாக அமைந்தது. குரல் மற்றும் எப்படி சரியாகப் பாடுவது என்பது குறித்து என் சகோதரர் வழங்கிய உதவிக் குறிப்புகள் நான் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் ஒரு போட்டியாளராக எனது பயணத்தைத் தொடர மிகவும் உதவியாக இருந்தன. ஆடிஷனில் சேர என்னைத் தூண்டியதோடு என் திறமையில் நம்பிக்கை வைத்து ஒரு பெரிய மேடையில் எனது குரல் திறனை வெளிப்படுத்தும் ஓர் அறிய வாய்ப்பைப் பெற என்னை ஊக்குவித்த என் தந்தையும் இந்த போட்டியில் நான் கலந்துகொள்ள ஒரு முக்கியக் காரணம்

பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் பங்கேற்ற உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ரூஹன்: எனது இன்னொரு குடும்பமாக நான் கருதும் எனது சக போட்டியாளர்கள் மற்றும் குழுவினருடன் நான் பகிர்ந்து கொண்ட தருணங்களை விட சிறந்த நினைவுகள் எதுவும் இல்லை. நாங்கள் போட்டியாளர்களாக இருந்தாலும், நாங்கள் ஒருவரையொருவர் ஆதரித்துக் கொண்டதோடு மகிழ்வித்தும் கொண்டோம்.

திவ்யா: இது எனது திறமையையும் பாடும் திறனையும் வெளிப்படுத்த அனுமதித்தது.

நித்தியன்: பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று நீதிபதியான யுகேந்திரன் வாசுதேவன் சார், காலிறுதிச் சுற்றில் என்னுடன் இணைந்து பாடி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது மிகவும் வேடிக்கையாக இருந்தது மட்டுமல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிறகு, என்னுடன் இரண்டு வரிகள் இணைந்து பாட என் இரட்டைச் சகோதரர், நிமலன் கங்கா மேடைக்கு அழைக்கப்பட்ட தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தது. எங்கள் பந்தத்தையும் திறமையையும் ஒன்றாக வெளிப்படுத்தவும் என் சகோதரனுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியது என்னைப் பெருமைப்பட செய்ததோடு என் இதயத்தை மிகுந்த மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. எனது சக போட்டியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் நான் சிறந்த நேரத்தைச் செலவிட்டேன். நாங்கள் நிறைய சிரித்தோம், ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம். இவை எனது முழு அனுபவத்தையும் இன்னும் சிறப்பாக மாற்றின. எனது சகோதரர் மற்றும் யுகேந்திரன் சார் உடன் இணைந்து பாடியதும், மேடைக்குப் பின்னால் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியான தருணங்களும் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இல் எனது நினைவுகளை மேலும் பசுமையாக்கின.