கோல குபு பாரு, மே 12-
கோல குபு பாரு சட்டமன்ற மக்கள் சேவை மையம் வரும் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும் என்று அத்தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற பாங் சோக் தாவ் தெரிவித்தார்.
இதற்கு தாமான் காமெலானிலுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற லீ கீ ஹியோங்கின் சேவை மையம் பயன்படுத்தப்படும்.
“இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றிய வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் விவகாரங்களுக்குத் தீர்வு காண தொடர்ந்து நான் உழைப்பேன்” என்று கோல குபு பாரு பட்டணத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மலர் வழங்கும் நிகழ்வு மற்றும் வாக்காளர்களுக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பாங் இதனைக் குறிப்பிட்டார்.
-பெரித்தா ஹாரியான்





