spot_img
13.9 C
London
spot_img
Home கலை உலகம் கிரிஷ் இசை நிகழ்ச்சி! 90 நாட்களே எஞ்சி உள்ளன

கிரிஷ் இசை நிகழ்ச்சி! 90 நாட்களே எஞ்சி உள்ளன

0
229

கோலாலம்பூர், மே 27-

‘கிரிஷ் லைஃப் ஷோ’ இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி (சனிக்கிழமை) தலைநகரில் நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 90 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

கலைத் துறையில் பீடு நடை போட விரும்பும் இளம் பாடகர்களுக்கு இந்த ‘கிரிஷ் லைஃப் ஷோ’ நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை வழங்கக் காத்திருக்கிறது.

திறந்த முறையில் நடைபெறும் குரல் தேர்வில் பங்கு பெறுவதன் மூலம் இளம் கலைஞர்களுக்கு அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தக் குரல் தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் விதிக்கப்படவில்லை.

இந்நிகழ்ச்சியில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பெறலாம் என்பதால் நாள்காட்டியில் இந்த தேதியைக் குறித்து வைத்துக் கொள்ள நீங்கள் மறவாதீர்கள்.

பாடகர்களாக விரும்புவோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான பதிவு மற்றும் மேல் விவரங்களுக்கு 019-9395656, 019-6635656 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.