சிரம்பான், மே 27-
இங்குள்ள ஜாலான் டெம்பிளரில் 250 ஆண்டுகளுக்கு மேல் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லுக்குழி ஜேகேஆர் ஊழியர்களால் முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் அதன் பின்னர் இடமாற்றம் கண்டு அரசாங்க அனுமதியோடு மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கும்பாபிஷேகம் கண்டது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி, நகராண்மைக் கழக உறுப்பினர்கள், அன்புள்ள கவிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆலயத்திற்கு 50,000 வெள்ளி மானியம் வழங்கவிருப்பதாக அருள் தெரிவித்தார்.
இக்கும்பாபிஷேக விழாவில் 2000திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரின் தரிசனம் பெற்றனர்.

