புத்ராஜெயா, மே 28-
தனிநபர், சிறு விவசாயிகள், சிறு தோட்டக்காரர்களை உட்படுத்திய சொந்த டீசல் வாகன உரிமையாளர்களுக்கு மடானி உதவி தொகை திட்டம் அல்லது புடி மடானியை நிதியமைச்சு அமல்படுத்தியுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் எரிபொருள் பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இன்று தொடங்கி புடி மடானிக்கு சொந்த டீசல் வாகன உரிமையாளர்கள்,சிறு விவசாயிகள், சிறு தோட்டக்காரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதில் “புடி இண்டிவிடு” திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் சொந்த டீசல் வாகன உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதே போல் “புடி அக்ரி-கொமோடிட்டி”இன் கீழ் விவசாய பொருட்கள் திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகள், சிறு தோட்டக்காரர்களும் விண்ணப்பிக்கலாம் என்று ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டது.





