கோலாலம்பூர், ஜூன் 24-
ஒரு தாய் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். அத்தகைய எண்ணங்களே ஒரு நல்ல குழந்தையை உருவாக்கும்.
ஆகையால், நல்ல குழந்தை கருவில்தான் உருவாகிறது என்று இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் தெரிவித்தார்.
நல்ல குழந்தை உருவாக தாய்மார்களின் எண்ணங்கள் மிகவும் முக்கியமானவை என்று தலைநகர் சோமா அரங்கில் கே.ஏ.குணாவின் கருவிலேயே தொடங்கும் அறிவார்ந்த பெற்றோர்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கிய போது குறிப்பிட்டார்.

நல்ல குழந்தைகள் உருவாவதற்கு பெற்றோர்கள் எத்தகைய பண்பு நலன்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கூறுகளை ‘கருவிலேயே தொடங்கும் அறிவார்ந்த பெற்றோர்கள் ‘ எனும் இந்நூல் கொண்டுள்ளது.
இந்த நூல் தமிழ்ப் பள்ளிகளை சென்றடைய வேண்டும். ஆசிரியர்களும் இதனைப் படிக்க வேண்டும். இதற்கு தனது பங்கை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பயனுள்ள இந்த நூலை பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





