பெந்தோங், ஜூன் 29-
ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸின் 16.5ஆவது கி.மீட்டரில் கெந்திங் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த வேளையில் விரைவு பேருந்து ஒன்று தடம் புரண்டதில் 2 சீன பிரஜைகள் மரணமுற்றனர்.
வெள்ளிக்கிழமை காலை 10.52 மணிக்கு நிகழ்ந்த இவ்விபத்தில் பேருந்தில் 20 சுற்றுப்பயணிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பகாங் மாநில தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 2 பேர் அப்பேருந்தில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய போது இஸ்மாயில் அப்துல் கானி குறிப்பிட்டார்.





