மஇகா பேராளர்கள் டி. மோகனை ஆதரிக்காதது பெரும் தவறு! -டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

205

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9-

சமூக உணர்வு கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் மஇகா முன்னாள் உதவி தலைவர் டத்தோ டி.மோகனை பேராளர்கள் ஆதரிக்காது பெரும் தவறு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலை மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. இந்திய சமூகத்திற்கு குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்காக மோகன் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று மஇகாவின் முன்னாள் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து, மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தை (மீஃபா) மலேசிய பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் 2ஆம் நிலை வெற்றியாளராக உருவாக்குவதற்கும் கடுமையாகப் பாடுபட்டார்.

மீஃபாவை சக்தி வாய்ந்த விளையாட்டு அமைப்பாக மோகன் சுயமாக மேம்படுத்தினார் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

51 வயதே நிரம்பிய மோகன் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.

-எப்.எம்.டி.