spot_img
10.8 C
London
spot_img
Home சமூகம் உயிரைப் பறிக்கும் இணைய பகடிவதை! மஇகா மகளிர் அணி கடும் ஆட்சேபம்

உயிரைப் பறிக்கும் இணைய பகடிவதை! மஇகா மகளிர் அணி கடும் ஆட்சேபம்

0
229

கோலாலம்பூர் ஜூலை 9-

இணைய பகடிவதைக்கு பல இளம் பெண்கள் பலியாகி வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று மஇகா மகளிர் பிரிவு தேசிய தலைவி திருமதி சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

நாட்டில் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. உயிரைப் பறிக்கும் இணையப் பகடிவதையை மஇகா மகளிர் அணி வன்மையாக எதிர்ப்பதாக அவர் சொன்னார்.

இதுபோன்ற செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. காரணம், ஒவ்வொரு உயிரும் மிகவும் விலைமதிப்பற்றது என்றார் அவர்.

இளம் வயது பெண்கள் உட்பட இளம் தலைமுறையை குறி வைத்து சில கும்பல்கள் பகடிவதை செய்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.

இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் பாமி பட்சில் கூறி இருப்பதைத் தாங்கள் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணைய பகடிவதை சம்பவம் இனியும் தொடராமல் இருப்பதைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மஇகா தேசிய மகளிர் பிரிவு வலியுறுத்துவதாகவும் சரஸ்வதி கூறினார்.