spot_img
13.6 C
London
spot_img
Home சமூகம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்குகிறார் அன்வார்! -டத்தோ ஆர்.ரமணன்

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்குகிறார் அன்வார்! -டத்தோ ஆர்.ரமணன்

0
160

கோலாலம்பூர், ஜூலை 10-

இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னுரிமை அளித்து வருகிறார் என்பது இச்சாராருக்காக இவர் வகுத்த திட்டங்கள் வெற்றி பெற்றிருப்பதன் வழி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் விரிவுபடுத்தவிருப்பதாக தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் தெரிவித்தார்.

“அந்த வகையில் 30 மில்லியன் வெள்ளி கூடுதல் தொகையில் “ஸ்பூமி கோஸ் பிக்” திட்டம், கூடுதலாக 50 மில்லியன் வெள்ளியில் அமானா இக்தியார் மலேசியா வாயிலாக இந்திய பெண்களை மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் ஆகக் கடைசியாக பேங்க் ராக்யாட்டின் 50 மில்லியன் வெள்ளி ஐ-பிரீஃப் திட்டம் முதலியவற்றை நாங்கள் தொடங்கியுள்ளோம்” என்றார்.

பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கடந்த 4 மாதங்களில் இந்நாட்டு இந்தியர்களுக்கு கூடுதலாக 130 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார்.

-பெர்னாமா